Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசிபலன் 18.09.2022

3

மேஷம்

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.

அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். தைரியம் கூடும் நாள்.

ரிஷபம்

இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.

உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்

சந்திரன் இருப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் கோபப்படுவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கி தவிப்பீர்கள்.

சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி இருக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள்.

உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நிதானம் தேவைப்படும் நாள்.

கடகம்

சில வேலைகளை அலைந்துதிரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகளைநயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் பிரச்சினைகள் வரக்கூடும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

சிம்மம்

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். ஆன்மிக பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.

வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். சவால்களில் வெற்றி பெறும் நாள்.

துலாம்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

பழையசிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிர்ஷ்டம் பெருகும் நாள்.

விருச்சிகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும்.

உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

தனுசு

உற்சாகமாக எதையும் செய்ய தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். அழகும் இளமையும் கூடும்.

வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

மகரம்

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வளைந்து கொடுத்து செல்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வெற்றி கிட்டும் நாள்.

கும்பம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.

உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்

தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.

வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

%d bloggers like this: