Take a fresh look at your lifestyle.

யாழ்ப்பாணத்தின் முதலாவது இணைய பலசரக்கு விற்பனையகமான Maligai.lk QR குறியீட்டு கொடுப்பனவு வசதியை வழங்கியது கொமர்ஷல் வங்கி

368

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முதலாவது இணைய பலசரக்கு விற்பனையகமும் மளிகைக் கடையுமான Maligai.lk (மளிகை) நிறுவனத்துக்கு LANKAQR வசதியை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து தற்போது QR குறியீடு மூலமாகக் கொடுப்பனவுகளை ஏற்கும் வசதியை அந்நிறுவனம் பெற்றுள்ளது.

இதற்கு மேலதிகமாக அந்நிறுவனத்தின் இணையக் கொடுப்பனவு நுழைவாயில் சேவை வழங்குநராகவும் (Internet Payment Gateway – IPG) கொமர்ஷல் வங்கி மாறியுள்ளது.

யாழ்ப்பாணத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் வாழும் மக்கள்ரூபவ் குழந்தைப் பராமரிப்புப் பொருட்கள் பலசரக்குப் பொருட்கள் வீடுகளில் வளர்ந்த பழங்களும் மரக்கறிகளும் உலாவு கோழி இறைச்சியும் மீனும் அழகுசாதனப் பொருட்களும் சுகாதாரப் பொருட்களும் தோலகட்டி உற்பத்திகள் வி.எஸ்.எஸ் நல்லெண்ணெய் போன்ற யாழ்ப்பாணத்துக்கே உரித்தான பொருட்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட பொருட்களை www.Maligai.lk இணையத்தில் கொள்வனவு செய்ய முடியும். LANKAQR நியமத்தின் கீழாக உருவாக்கப்பட்ட QR அடிப்படையிலான இலங்கையின் முதலாவது செயலியான கொமர்ஷல் வங்கியின் Q+ செயலி (Q + App) QR கொடுப்பனவுகளுக்கான தேசிய நிமயத்துடன் ஒருங்கிணைப்பட்ட முதல் சில டிஜிட்டல் வங்கித் தளங்களில் ஒன்றான குடயளா செயலியின் ‘QR Pay” வசதி மூலமாக அல்லது LANKAQR-இன் பதிவுசெய்யப்பட்ட வேறு எந்த ஞசு கொடுப்பனவுச் செயலி மூலமாக தமது கொள்வனவுக்கான கொடுப்பனவை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள முடியும்.

QR கொடுப்பனவு வசதியானது இணையத்தளத்தின் கொள்வனவின் பின்னரான சரிபார்ப்பு (checkout) பக்கத்தில் காணப்படுவதோடு அவ்வசதிக்கு மேலதிகமாக விஸா மாஸ்டர்கார்ட் நேரடியான வங்கிப் பரிமாற்றம் போன்ற தெரிவுகளும் கொடுப்பனவு வசதிகளாகக் காணப்படுகின்றன. எனவே இவ்விணையத்தளமானது பல்வேறு வழிகளில் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

மளிகை இலத்திரனியல் வர்த்தகத் தளத்துடன் QR குறியீடு ஒருங்கிணைக்கப்பட்டமை மூலமாக சௌகரியமானதும் பாதுகாப்பானதுமான கொள்வனவுகளை மேற்கொள்ளவும் யாழ்ப்பாண மாவட்டத்தின் எப்பகுதியிலிருந்தும் பொருட்களை கொள்வனவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதியும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்துள்ளது. வணிக நிலையத்தின் QR குறியீட்டை வாடிக்கையாளர் ஸ்கான் செய்வதன் மூலமாக கொடுப்பனவு நடைமுறையை அவரே ஆரம்பிப்பதாலும் குறித்த கொடுப்பனவுக்கான தொகை அவரது கணக்கிலிருந்து பெறப்படுவதற்கு முன்னதாக வாடிக்கையாளர் அதை உறுதிப்படுத்தி அதற்கான அனுமதியை வழங்க வேண்டியிருப்பதாலும் QR கொடுப்பனவுகள் பாதுகாப்பானவையாகும்.

QR கொடுப்பனவு வசதிக்கு மேலதிகமாக Maligai.lk இணையத்தளத்துக்கான இணையக் கொடுப்பனவு நுழைவாயில் சேவையும் கொமர்ஷல் வங்கியால் வழங்கப்படுகிறது. கடனட்டை டெபிட் கார்ட்கள் ஆகியவற்றை அனுமதித்து விஸா மாஸ்டர்கார்ட் வகையிலான கார்ட்கள் மூலமாக நேரடிக் கொடுப்பனவுகளைச் செயற்படுத்துவதற்காக இணைய கார்ட் கொடுப்பனவுகளை ஏற்பதற்கு இது வழிவகுக்கும்.

வங்கியால் வழங்கப்படும் இணையக் கொடுப்பனவு நுழைவாயில் சேவைகள் வங்கியின் சிம்பிள் (Simple Pay) சேவை மூலமாக வழங்கப்படுகிறது. சிம்பிள் பே என்பது பிரதான இணையக் கொடுப்பனவு நுழைவாயில் சேவையின் இலகுபடுத்தப்பட்ட வடிவமாக மாஸ்டர்கார்ட் கொடுப்பனவு நுழைவாயில் சேவைகள் (Mastercard Payment Gateway Services – MPGS) மூலமாக வழங்கப்படுகிறது. கொடுப்பனவு அட்டைத் தொழிற்றுறைத் தரவுப் பாதுகாப்பு நியமத்துக்கு (Payment Card Industry Data Security Standard – PCI-DSS) முற்றிலும் ஏற்புடையதாக இச்சேவை அமைந்துள்ளது. சிம்பிள் பே மூலமாக இலங்கையைச் சேர்ந்த தொழில்முயற்சியாளர்கள் இணையத்தள அபிவிருத்தி வடிவமைப்பு ஆகியவற்றுக்கு மிகப்பெரிய தொகையைச் செலவுசெய்யாமல் தமக்கான இணைய அங்காடியை உருவாக்க முடியும். பொருட்களை விற்பனை செய்தல் இலத்திரனியல் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளல் தமது வணிக வாய்ப்புக்களைக் கணிசமானளவு மேம்படுத்துதல் ஆகிய வசதிகள் அவர்களுக்கு இதன் மூலமாகக் கிடைக்கப்பெறுகின்றன.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இணையப் பொருட் கொள்வனவில் காணப்படும் இடைவெளியை உணர்ந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் 2020 இல் ஆரம்பிக்கப்பட்ட Maligai.lk அப்பகுதிகளில் காணப்படும் நகரமயப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் தளத்துக்கும் தொலை அணுக்க வசதிகொண்டோருக்கும் சேவையை வழங்கும் நோக்கில் செயற்படுகிறது. அத்தோடு வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் இணையத்தில் பொருட்களைக் கொள்வனவுசெய்து பொருட்களைப் பெறுவோரின் வீட்டு வாசலுக்கே அப்பொருட்களை அனுப்ப முடிவதால் வடக்கில் வாழும் தமது உறவினர்களையும் தனியாக வசிக்கும் மூத்த வயதையுடைய தமது பெற்றோரையும் கவனித்துக்கொள்ளும் வாய்ப்பையும் இந்த இணைய அங்காடி வழங்குகிறது.

இவ்விணையத்தளத்தில் விசேட தள்ளுபடிகளும் கட்டணக் கழிவுகளும் வழங்கப்படுவதோடு பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்யவும் Maligai.lk ஊக்குவிக்கிறது. உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இவ்வாண்டு வங்கி அதன் 100 வது அண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 873 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.

%d bloggers like this: