இலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் முன்னணி நிதி நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் களனி பிரதேசத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் களனி கிளையை நவீன வசதிகள் படைத்த புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது.
புதிய கிளை இல. 950 கண்டி வீதி ஹிம்புட்டுவெல்கொட தலுகம களனி எனும் முகவரியில் அமைந்துள்ளது. இந்தக் கிளையை மக்கள் வங்கி மற்றும் பீப்பள்ஸ் லீசிங் தவிசாளர் சுஜீவ ராஜபக்ச திறந்து வைத்தார்.
இந்த கிளையின் திறப்பு விழாவில் பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான டி.பி.குமாரகே சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் லயனல் பெர்னான்டோ மற்றும் பிரதி பொது முகாமையாளர்களான ரொஹான் தென்னகோன் தமித் மலவிதந்தில லக்சந்த குணவர்தன பிரபாத் குணசேன உதேஷ் குணவர்தன ஆகியோருடன் பிரதம முகாமையாளர்களான சமன் லியனகே சமில் ஹேரத் வஜிர ராமநாயக்க களனி பீப்பள்ஸ் லீசிங் கிளையின் சிரேஷ்ட முகாமையாளர் சமந்த செனெவிரட்ன ஆகியோருடன் பெருமளவு பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மக்கள் வங்கி மற்றும் பீப்பள்ஸ் லீசிங் தவிசாளர் சுஜீவ ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கையில், ´புதிய அரசாங்கத்தின் சௌபாக்கிய நோக்கு எனும் திட்டத்தின் கீழ் நாட்டின் பல பாரம்பரிய துறைகளின் மறுமலர்ச்சிக்கு வித்திடுவதாக அமைந்திருக்கும். புதிய தொழிற்துறைகள் மற்றும் வியாபார வாய்ப்புகள் எழும் போது நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இவற்றுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும். எனவே பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் அரசாங்கத்தின் சௌபாக்கிய நோக்கு திட்டத்துக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தினூடாக உருவாக்கப்படும் திட்டங்களுக்கு நிதி உதவிகளை பெற்றுக் கொடுக்கும். களனி பிரதேசத்தை அண்மித்து பெருமளவு புதிய வியாபாரங்கள் தோற்றம் பெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம். எனவே களனி மற்றும் அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு பீப்பள்ஸ் லீசிங் வழங்கும் புத்தாக்கமான நிதித் தீர்வுகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.´ என்றார்.
தவிசாளர் மேலும் குறிப்பிடுகையில் ´மக்களின் சகல நிதி மற்றும் லீசிங் தேவைகளை நிவர்த்தி செய்யும் நிதிச் சேவைகள் வழங்குநராக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கின்றது. களனி பிரதேசத்தைச் சேர்ந்த மக்களை எவ்வித சிக்கல்களுமின்றி பீப்பள்ஸ் லீசிங் ஊடாக தமக்கு தேவையாக நிதிச் சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு நான் அழைக்கின்றேன்.´ என்றார். 1996ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது. கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக Fitch ரேட்டிங் லங்காவினால் A+(lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. பிரான்ட் ஃபினான்ஸ் பிஎல்சியினால்ரூபவ் பீப்பள்ஸ் லீசிங் நாட்டின் முதல் தர வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் நாட்டின் சிறந்த பத்து கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவினால் வெளியிடப்படும் கூட்டாண்மை அறிக்கையிடலில் பீப்பள்ஸ் லீசிங் 3ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
பீப்பள்ஸ் லீசிங் நிறுவத்தினால் வழங்கப்படும் நிதிச் சேவைகளில் லீசிங் வாகன கடன் நிலையான வைப்புகள் சேமிப்புக் கணக்குகள் வீடமைப்பு மற்றும் வியாபார கடன்கள் தங்கக் கடன்கள் மார்ஜின் டிரேடிங் (எல்லை வியாபாரம்) ஃபக்டரிங் மற்றும் இஸ்லாமிய வங்கியியல் சேவைகள் போன்றன அடங்கியுள்ளன.
இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி பீப்பள்ஸ் மைக்ரோ-ஃபினான்ஸ் லிமிடட் பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட் பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.
பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.