Take a fresh look at your lifestyle.

பணமற்ற கொடுப்பனவுகளுக்காக கொமர்ஷல் வங்கியும் PAYable-உம் இணைந்து ஸ்மார்ட் விற்பனைப் புள்ளி மினி கருவியை அறிமுகப்படுத்தின

61

இலங்கையின் எப்பகுதியிலும் இருக்கும் வணிகங்கள் கார்ட் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும் வகையில் PAYable தனியார் நிறுவனத்துடன் இணைந்து அன்ட்ரொய்ட் மினி விற்பனைப் புள்ளி (Android Mini Point-of-Sale – POS) கருவியொன்றை கொமர்ஷல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட் POS-Mini கருவியானது முழுமையாகச் செயற்படும் அன்ட்ரொய்ட் கருவியாகக் காணப்படுவதோடு, Mag-stripe, EMV, Chip மூலமாகப் பணப்பரிமாற்றங்களைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கிறது. இக்கருவியானது Near Field Communication (NFC) பரிமாற்றங்களைக் கையாளும் திறனையும், QR குறிகளை உயர் வேகத்தில் ஸ்கான் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது. மிருதுவானதும் சௌகரியமானதுமான இக்கருவியானது சிம் (SIM), Wi-FI இணைப்பு வசதியைக் கொண்டுள்ளதோடு, மூன்று மொழிகளிலும் பயனர் இடைமுகத்தை வழங்குகிறது.

இத்தீர்வு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் கார்ட் நிலையத்தின் தலைவர் திரு. துசித சுரவீர, கொமர்ஷல் வங்கியால் வழங்கப்படும் இந்த அன்ட்ரொய்ட் மினி விற்பனைப் புள்ளிக் கருவியானது இலங்கை முழுவதிலும் அடுத்த சில வாரங்களிலும் கிடைக்கக்கூடியதாக அமையும். மைக்ரோ சிறிய – நடுத்தரத் தொழிற்றுறைக்குப் பயனளிக்குமாறு உருவாக்கப்பட்டுள்ள இக்கருவிகள் ரொக்கமற்ற பணப்பரிமாற்றங்களை (cashless transactions) ஏற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் வணிகங்களுக்கான செலவு குறைவான தீர்வை வழங்குவதன் மூலமாக, ரொக்கமற்ற பணப்பரிமாற்றத்தில் புரட்சியை ஏற்படுத்தவுள்ளன. இக்கருவிகளையும் சேவைகளையும் எமது வணிகர்களுக்கு வழங்குவதற்கு இயலுமாக அமைகின்றமை குறித்து கொமர்ஷல் வங்கி மகிழ்ச்சியடைவதுடன், ரொக்கமற்ற சூழலொன்றை அணுகுவதற்கான திறனைப் பெறுவதன் மூலமாக அவர்களின் வணிகங்கள் வளர்ச்சியடைவதற்கு உதவுமென நம்புகிறது எனத் தெரிவித்தார்.

PAYable தீர்வானது பணப்பரிமாற்றத்தை இலகுவாக்கி, வெறுமனே மூன்று படிமுறைகளில் பணப்பரிமாற்றமொன்று பூர்த்தி செய்யப்படும் வசதியை வழங்குகிறது. இத்தீர்வின் பயனர் இடைமுகம், மும்மொழிகளிகளிலும் கிடைக்கின்றமையானது அதன் பல்திறனுக்கு மேலும் பலமாக அமைகிறது. மேலதிகமாக தானியக்கமாகப் பணத்தைச் செலுத்தும் வசதி சிக்கலான கைமுறைக் கணக்கிணக்கத்தை (manual reconciliation) இல்லாது செய்தமை தவணைக் கட்டண வசதியை வழங்கக்கூடியதாக அமைகின்றமை பல வகையான நாணயங்களை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியனரூபவ் இதன் வசதிகளாக அமைகின்றன.

PAYable தீர்வு தொடர்பாகவும் கொமர்ஷல் வங்கியுடனான பங்குடைமை தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்த PAYable நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் இணை நிறுவுநருமான யொஹான் விஜேசிறிவர்தன ஸ்மார்ட் மினி விற்பனைப் புள்ளியானது ரொக்கமற்ற பணத்தை மைக்ரோ சிறிய – நடுத்தரத் தொழில்முயற்சிகள் ஏற்றுக்கொள்வதில் அடுத்த கட்டமாக அமையும். பல்துறைத் திறன் பல்வகையான வசதிகள் ஆகியவற்றை இக்கருவி வழங்குவதால் மைக்ரோ சிறிய – நடுத்தரத் தொழில்முயற்சிகள் ஆகியவை தமது வருமான வழிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு அவற்றுக்குப் பலமளிக்கும் மிகப்பொருத்தமான ஒன்றாக இது அமைகிறது. இம்முயற்சியில் கொமர்ஷல் வங்கியோடு இணைந்து செயற்பட முடிந்தமை குறித்து நாம் மகிழ்ச்சியடைவதோடு இலங்கையின் எப்பகுதியிலும் எந்த வணிகங்களுக்கும் ரொக்கமற்ற பணப்பரிமாற்றத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

இந்த ஸ்மார்ட் விற்பனைப் புள்ளி மினி கருவியானது 4.5 அங்குல தொடுதிறன் கொண்ட திரையைக் கொண்டுள்ளதோடு 64 ஜிகாபைட் வரையிலான சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது. அத்தோடு உயர் வேகத்திலான ஸ்வைப் அல்கோரிதமானது (Swipe algorithm) பணப்பரிமாற்றங்களை இலகுவாகப் பூர்த்திசெய்யும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இக்கருவியானது விஸாரூபவ் மாஸ்டர்கார்ட் மூலமாகவும் இன்னும் பல வொலட் (wallet) வசதிகள் மூலமாகவும் பணப்பரிமாற்றங்களைக் கையாள முடியுமென்பதோடு ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை பாதுகாப்பை வழங்குவதால் கொடுப்பனவு அட்டைத் தொழிற்றுறைத் தரவுப் பாதுகாப்பு (Payment Card Industry Data Security Standard – PCIDSS) நியமத்துக்கு அமைவாகவும் காணப்படுகிறது. எனவே கார்ட் உரிமையாளரின் தகவல்கள் 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளன.

2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட PAYable நிறுவனம் இலங்கை முழுவதும் 22,000 மேற்பட்ட வணிக நிறுவனங்களைக் கொண்டுள்ளதோடு இதன்மூலமாக நாட்டிலுள்ள மிகப்பெரிய நடமாடும் விற்பனைப் புள்ளிச் சேவை வசதியை வழங்கும் தனித்த நிறுவனமாகவும் காணப்படுகிறது. பிரதானமான செலவுத் தடைகளை இல்லாது செய்வதன்மூலமாக ரொக்கமற்ற பணப்பரிமாற்றங்களை ஏற்றுக்கொள்வதிலிருந்து விலத்தப்பட்டிருந்த வணிக நிறுவனங்களைரூபவ் கடனட்டை டெபிட் கார்ட் கொடுப்பனவுகளை ஏற்க வைத்து அவற்றை முன்னெடுக்க PAYable நிறுவனமானது வெற்றிகரமாக ஊக்குவித்துள்ளது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது அண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 873 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.

%d bloggers like this: