Take a fresh look at your lifestyle.

உள்நாட்டு இறப்பர் தொழிற்றுறையின் வருமானத்துக்கு ஊக்கம்

40

உள்நாட்டில் ஏற்பட்டுள்ள கேள்வி அதிகரிப்பை எதிர்கொள்வதற்காக சியெட் களனி நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரித்துள்ள நிலையில், அதற்காக இலங்கைச் சந்தையில் அந்நிறுவனம் மாதாந்தம் கொள்வனவு செய்யும் இயற்கை இறப்பரின் அளவு, 35 சதவீதத்தால் வரை செப்டெம்பரில் அதிகரித்துள்ளதென அந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

தனது இயற்கை இறப்பர் தேவைகளை உள்நாட்டிலேயே முழுவதுமாகக் கொள்வனவு செய்யும் சியெட் களனி, செப்டெம்பர் 2020க்கு மாத்திரமான அதனது கொள்வனவு 500 தொன்களை (500,000 கிலோகிராம்) எட்டியுள்ளதோடு, இதன் காரணமாக கேகாலைரூபவ் களுத்துறைரூபவ் இரத்தினபுரிரூபவ் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்களுக்கு 150 மில்லியன் ரூயஅp;பாய் வருமானம் எட்டப்பட்டுள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

கொவிட்-19 பரவல் காலத்துக்கு முன்னராக டிசெம்பர் 2019 முதல் பெப்ரவரி 2020 வரையிலான காலப்பகுதியில், சியெட் களனி நிறுவனத்தால் மாதாந்தம் சராசரியாக 366 தொன் இயற்கை இறப்பர் கொள்வனவு செய்யப்பட்டதோடு அவற்றின் மூலமாக உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மாதாந்தம் சராசரியாக 107 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்திருந்தது என நிறுவனம் தெரிவித்தது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ரவி டட்லானி சியெட் களனி நிறுவனம் இலங்கையில் செயற்படுவதற்காக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இயற்கை இறப்பர் இங்கு கிடைக்கின்றமை அமைந்துள்ளதோடு உள்நாட்டுப் பெறுமதிச் சேர்ப்பை உச்சபட்சமாகப் பயன்படுத்துவது குறித்து நாம் எப்போதுமே கவனஞ்செலுத்தி வந்திருக்கிறோம். அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து எமது உற்பத்தியை நாம் அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டு இயற்கை இறப்பர் உற்பத்தியாளர்களுக்கான எமது பங்களிப்பு அதிகரித்துள்ளது. வெறுமனே ஏழு மாதங்களில் இது 40 சதவீதம்வரை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

இறக்குமதிப் பதிலீடு மூலமாக அந்நியத் செலாவணியைக் காக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளித்தவாறு ட்ரக் பஸ் ரேடியல் இரு சக்கர வாகனங்களுக்கான டயர்கள் ஆகியவற்றின் உற்பத்தி சியெட் நிறுவனத்தால் அதிகரிக்கப்பட்டமையானதுரூபவ் கொவிட்-19 தொற்றுப்பரவல் காரணமாகச் சடுதியாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைச் சடுதியாக வளர்ச்சியடையச் செய்வதற்கு உள்நாட்டுத் தொழிற்றுறைக்கு உதவுமெனவும் திரு. டட்லானி தெரிவித்தார்.

இயற்கை இறப்பரை (Natural RSS rubber) கிட்டத்தட்ட 30 விற்பனையாளர்களிடமிருந்து சியெட் களனி கொள்வனவு செய்வதோடு, நாளாந்த அடிப்படையில் அவர்களோடு தொடர்புகளைப் பேணுகின்றது. நாளாந்தக் கொள்வனவுப் பரிமாற்றங்களுக்கு மேலதிகமாக, இறப்பரின் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பான அறிவையும் பகிர்கிறது. விற்பனையாளர்களின் செயற்பாடுகளை அவ்வப்போது நாங்கள் ஆய்வு செய்வதோடு, உயர் தரத்தை அவர்கள் பேணுவதற்கு உதவி செய்கிறோம் எனரூபவ் திரு. டட்லானி தெரிவித்தார். இதன் விளைவாக, எமது விற்பனையாளர்களில் பலர், இப்போது ´சியெட்டால் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை இறப்பர் விற்பனையாளர்´ என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இந்த அங்கீகாரம் காரணமாக சியெட் களனி நிறுவனத்துக்குத் தொடர்ச்சியாக இறப்பரை வழங்குபவர்களாக இருக்க முடிவதோடு, ஏனைய உள்நாட்டுச் சந்தைக்கும் RSS தரத்திலான உயர்தர இறப்பரை விநியோகிக்கும் வாய்ப்பைப் பெற முடிகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

சியெட் நிறுவனத்தால் ட்ரக், பஸ் டயர்களின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டதோடு, இதன்மூலமாக இவ்வகைப் பிரிவில் காணப்படும் தேவையில் 100 சதவீதமானவற்றையும் நிறுவனம் உற்பத்தி செய்யக்கூடியதாக அமைந்ததோடு இதன்மூலமாக அந்நியச் செலாவணியில் 11 பில்லியன் ரூபாயை ஆண்டொன்றில் அரசாங்கம் சேமிக்க, சியெட் வழியேற்படுத்தியிருந்தது. நிறுவனத்தால் இப்போது இரு சக்கர வாகன டயர்கள் தொடர்பாக நடைமுறைப்படுத்தப்படும் முன்னெடுப்புக் காரணமாக, இறக்குமதிப் பதிலீடு மூலமாக ஆண்டொன்றில் 350 மில்லியன் ரூபாயை மேலதிகமாகச் சேமிக்க முடியுமாக அமைந்துள்ளது.

சியெட் களனி நிறுவனம் தற்போது பல்வேறு வகையான டயர்களில் ஆண்டொன்றுக்கு இரண்டு மில்லியன் டயர்களைத் தயாரிக்க முடியும். அதன் உற்பத்தி ஆலைகளுக்குத் தேவையான புதிய இயந்திரங்களை நிறுவுவதற்கு வெளிநாட்டுத் தொழில்நுட்பவியலாளர்களின் வருகையை அந்நிறுவனம் எதிர்பார்த்துள்ள நிலையில், அவ்வியந்திரங்களும் நிறுவப்பட்ட பின்னர், கார், வான் ரேடியல் டயர்களில் மேலும் 200,000 டயர்களை உடனடியாக உற்பத்தி செய்ய முடியும்.

குறிப்பிடத்தக்கதாகரூபவ் டிசெம்பர் 2019இலிருந்து இன்று வரைரூபவ் டயர்களின் விலைகளில் சியெட் களனி நிறுவனம் மாற்றத்தை ஏற்படுத்தப்படவில்லை. கொள்திறனை அதிகரிப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், அதேபோன்று கேள்வி அதிகரிப்புக் காரணமாகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும், வாடிக்கையாளர்களுக்கும் பொருளாதாரத்துக்கும் உதவும் வண்ணம் இம்முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இந்தியா – இலங்கை இணைந்த பங்குடைமை நிறுவனங்களில் உற்பத்தித் துறையில் மிகவும் வெற்றிகரமானவற்றுள் ஒன்றாக சியெட் களனி ஹோல்டிங்ஸ் கருதப்படுகிறது. இந்த இணைந்த பங்குடைமை இதுவரை இலங்கையில் 8 பில்லியன் ரூ;பாய் முதலீட்டை மேற்கொண்டுள்ளது. இதனுள் உற்பத்தி அளவை அதிகரித்தல், தொழில்நுட்பத் தரமுயர்த்தல், புதிய உற்பத்தி அபிவிருத்தி ஆகியவற்றுக்காக 2018ஆம் ஆண்டு ஜனவரியில் அர்ப்பணிக்கப்பட்ட 3 பில்லியன் ரூபாயும் உள்ளடங்குகிறது.

இலங்கையில் காணப்படும் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் மூலமாக ரேடியல் (பயணிகள் கார்கள், வான்கள், எஸ்.யு.வி வாகனங்கள்), வர்த்தக வகை (பயாஸ்-ப்ளை, ரேடியல்), மோட்டார் சைக்கிள், முச்சகரவண்டி, விவசாய வாகனப் பிரிவுகள் ஆகியவற்றுக்கான காற்றடைத்த டயர்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன.

%d bloggers like this: