Take a fresh look at your lifestyle.

HNB Finance இன் புத்தளம் கிளை தமக்கே சொந்தமான புதிய கட்டடத்திற்கு செல்கிறது

80
20 வருட காலமாக இலங்கை வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமுடைய நிதி சேவைகளை வழங்கிய HNB Finance நிறுவனத்தின் புத்தளம் கிளை, புத்தளம் நகர மத்தியில் இலக்கம் 44/A சேர்விஸ் வீதி புத்தளம் என்ற விலாசத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகவும் இடவசதிகளைக் கொண்ட நிறுவனத்திற்கு சொந்தமான புதிய மூன்று மாடி கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் சுற்றாடலுக்கு ஏற்ற விதமாக நிலையான முறையொன்றை பயன்படுத்தியமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் HNB Finance நிறுவனம் இந்த புதிய கட்டடத்தை நிர்மாணிக்கும் போது அதுகுறித்து தமது கவனத்தை செலுத்தியுள்ளமை விசேட அம்சமாகும். விசேடமாக மின்சாரத்தை சேமிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை திறம்பட பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய HNB Finance புத்தளம் கிளையின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்தத பிரபாத் தலைமையில் திறந்து வைக்கப்பட்டதுடன் இந்த நிகழ்விற்கு HNB Financeஇன் பிரதான நடவடிக்கைகள் அதிகாரி பிரியலால் அரங்கல, பிரதி பொதுமுகாமையாளர் – கிளைகள் வலைப்பின்னல், எனஸ்லி பெர்னாந்து ஆகிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தங்கக் கடன் துறையானது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கிடையில் பிரபலமடைந்திருந்தாலும் முறைப்படி மற்றும் நம்பிக்கையாகவும் இந்த சேவையை வழங்குவதற்காக முன்வந்துள்ள நிதி நிறுவனங்களுக்கு மத்தியில் HNB Finance நிறுவனம் வேகமாக முன்னோக்கிச் சென்றுள்ளமைக்கு காரணம் வாடிக்கையாளர்களுக்காக காட்டும் அக்கறை மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பால் உள்ள சிறந்த சேவை போன்ற விடயங்களாகும். விசேடமாக HNB Finance மூலம் வழங்கப்படும் அனைத்து நிதி சேவைகள் போன்றே HNB Finance தங்கக் கடன் சேவையும் மிகவும் துரிதமாக வாடிக்கையாளர்களின் பாராட்டுக்கள் மற்றும் ஈர்ப்பினையும் வென்றெடுப்பதற்கு முடிந்தமை விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட HNB Financeஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், நிறுவனத்தின் ஆரம்பத்திலிருந்தே விசேட செயல்திறனை சமூகத்திற்கு வழங்கிய HNB Finance புத்தளம் கிளையின் சேவையை மிகவும் உகந்த விதத்தில் மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்காக எமது நிறுவனத்திற்குரிய இந்த சூழல் உகந்ததாக அமையுமென் நான் நம்புகின்றேன். விசேடமாக நிறுவனத்தின் 20ஆவது ஆண்டு நிறைவிற்கு சமமாக எமக்குச் சொந்தமான கட்டடத்திற்கு புத்தளம் கிளையை கொண்டுசெல்ல முடிந்தமை எமக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகவே நான் பார்க்கின்றேன். இங்கே இருபது வருடகாலத்திற்குள் HNB Finance நிறுவனம் பெற்றுக் கொண்ட விசேட வெற்றிகள் மற்றும் பெற்றுள்ள முன்னேற்றம் தொடர்பில் எமது நிறுவன பணிப்பாளர் சபைக்கும் எப்பொழுதும் எம்முடன் இணைந்துள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் எனது ஊழியர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதற்காகவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றேன்.

விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட புத்தளம் நகரம் மற்றும் அதனை அண்டி வாழும் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக எமது புத்தளம் கிளை மூலம் மிகப் பெரிய ஒத்துழைப்பை பெற்றுக் கொடுக்க முடியுமென நான் எதிர்பார்க்கின்றேன். அத்துடன் நீண்டகாலமாக வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட இணைப்பின் அடிப்படையில் மிகவும் இடவசதி கொண்ட புதிய அலுவலக சூழல் ஒன்றுக்கு செல்வதற்கும் HNB Finance தங்கக் கடன் சேவைகள் மற்றும் ஏனைய நிதி சேவைகள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிட்டும். என தெரிவித்தார்.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.

%d bloggers like this: