Take a fresh look at your lifestyle.

COVID-19 தொற்றுநோயின் போதும் முதல் காலாண்டில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஹேலிஸ்

67

முன்னெப்போதும் இல்லாத வகையிலான சவால்களுக்கு மத்தியிலும் ஹேலிஸ் குழுமம் முதல் காலாண்டில் வரிக்கு முந்தைய இலாபமாக 1.17 பில்லியன் ரூபாவை பதிவு செய்ததுடன் இது கடந்த ஆண்டு நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பீடுகையில் 285.26 மில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளது. இந்த இலாப முன்னேற்றமானது குழுவின் ஏற்றுமதி சார்ந்த வர்த்தகங்களின் வலுவான செயல்திறனையும், நடத்துதல் செலவு செயல்திறனில் தொடர்ந்து கவனம் செலுத்துவதையும் பிரதிபலிக்கிறது. கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, Lockdownஇல் இருந்து நாடு வழமை நிலைக்கு திரும்பியதால், குழுமம் விரைவாக புதிய நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயற்பட்டதால் இயல்பு நிலைக்கு திரும்பியது. கொவிட்- 19 இலிருந்து எழுந்த முன்னெப்போதும் இல்லாத வகையிலான சிக்கல்களை மேற்கொள்வதற்கு குழுமத்திடமிருந்த திறன், குறிப்பாக அதன் செயற்பாடுகளின் ஆழத்தையும் அகலத்தையும் வழங்கும் போது அதன் சுறுசுறுப்பு மற்றும் வெற்றியே இதற்கு சான்றாகும். வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்ட விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகளால் குழுவின் வணிக நடவடிக்கைகளை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பதற்கு போதுமான ஆதரவும் கிடைத்தது.

குழுமத்தின் வருவாயானது 8% குறைந்து 48.23 பில்லியன் காலாண்டில் அமைந்திருந்ததுடன், ஓய்வு விடுதிகள் மற்றும் போக்குவரத்து துறைகளில் தொற்று நோய் காரணமாக தற்போது நிலவும் நிலைமைகள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளன. குழுமத்தின் ஹேஸ்மார்ட் மும்முயற்சிகள் மூலம் இயக்கச் செலவை பகுத்தறிதல் மற்றும் செயன்முறை செயல்திறன்களில் அயராது கவனம் செலுத்துவது நிர்வாகச் செலவுகளில் 10% குறைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக EBITDA இல் 18% வளர்ச்சியையும், EBITஇல் 11% வளர்ச்சியையும் இந்த காலப்பகுதியில் அடைந்துள்ளது. ஓய்வு விடுதிகள் துறையில் தொடர்ச்சியான வீழ்ச்சியை ஏற்றுமதி சார்ந்த வர்த்தகங்களின் வலுவான முக்கிய செயல்திறனால் ஈடுசெய்யப்பட்டன. குழுமத்தின் வரிக்கு முந்தைய இலாபமாக 1.17 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்ததுடன், வரிக்கு பிந்தைய இலாபம் 561.76 மில்லியனாக இருந்தது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 73.45 மில்லியன் ரூபாவாகும்.

குறுகிய காலத்தில் சவால்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ள நிலையில், எமது நடுத்தரத்திலிருந்து நீண்டகாலம் வரையிலான வளர்ச்சித் திட்டங்கள் திடமானவை, மேலும் இனிவரும் காலங்களில் வலுவான வருவாயை ஈட்டுவோம் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். என ஹேலிஸ் பி.எல்.சி.யின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டித்தகே தெரிவித்துள்ளார். சுத்திகரிப்பு மற்றும் கை பாதுகாப்பு துறைகள் ஒரு வலுவான Orderகளைக் கொண்டுள்ளன. அதேநேரம் தோட்டத்துறை தேயிலை விலையில் தொடர்ச்சியான முன்னேற்றத்தால் பயனடைவதாக எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஓய்வு விடுதித்துறை கொவிட்-19 தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை புரிந்துகொள்வதுடன், மேலும் இந்த சவாலான காலங்களில் இந்த துறைக்கு தனது முழுமையான ஆதரவைத் தொடர்ந்து வழங்குமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், இது விருந்தோம்பல் மதிப்பு சங்கிலி முழுவதும் அனைத்து பங்குதாரர்களுக்கும் தொடர்ச்சியான மதிப்பை உருவாக்குவதை உறுதி செய்கிறது. என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹேலிஸ் PLC நிறுவனத்தின் இயக்குநர்கள் சபையிலுள்ள முக்கிய பிரதிநிதிகளான மொஹான் பண்டித்தகே (தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி), தம்மிக்க பெரேரா (துணைத் தலைவர்), சரத் கணேகொட, ரஜித்த காரியவசன், டொக்டர் ஹர்ஷ கப்ரால் PC, ருவன் வைத்தியரத்ன, ஹிஷாம் ஜமால்டீன், அரவிந்த பெரேரா, ஜயந்தி தர்மசேன, ரொஹான் கார் மற்றும் காமினி குணரத்ன.

%d bloggers like this: