Take a fresh look at your lifestyle.

சிறுவர்களுக்கு தமது வீடுகளில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் அமானா வங்கி

76
சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் “வீட்டில் சேமிப்பை பழக்கமாக்கிடுவோம்” எனும் தொனிப்பொருளில் ஊக்குவிப்புத் திட்டத்தை அமானா வங்கி அண்மையில் ஆரம்பித்துள்ளது. 2020 ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதன் போது, சிறுவர்கள் தமது சேமிப்புக் கனவை வீடியோ பதிவு செய்தவற்றை வங்கியின் உத்தியோகபூர்வ Facebook பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர்.

சிறுவர்களாக இருந்தாலும், அவர்களின் பாரிய இலட்சிய கனவுகளினூடாக, ஏனைய பலரும் சேமிப்பை ஆரம்பிக்க ஊக்குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பில் வங்கியின் தொடர்பாடல் மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஆசிம் ராலி கருத்துத் தெரிவிக்கையில், “சிறுவர்களிடையே சிறந்த கனவுகள் காணப்படுகின்றன. அதுவே அவர்களுக்கு முழு உலகுமாக அமைந்துள்ளன. அவர்களை சேமிக்க ஊக்குவிப்பது என்பது, அவர்களின் கனவை எய்துவதற்கு ஒரு படிக்கல்லாக அமைந்திருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். தமது வீட்டிலிலுள்ள சேமிப்பு உண்டியல் ஊடாக அதை அவர்களுக்கு ஆரம்பிக்கக்கூடிய சிறந்த பகுதியாக அமைந்திருக்கும” என்றார்.

வங்கியின் முதலீட்டு வைப்புக்கள் பிரிவின் தலைமை அதிகாரி அர்ஷாத் ஜமால்தீன் கருத்துத் தெரிவிக்கையில், “சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் குதூகலத்தை சிறுவர் ஒருவர் உணர்ந்ததும், அவர்கள் அதிகளவு சேமிக்க விரும்புவார்கள். இதுவே அவர்களின் பெற்றோருக்கு, அவர்களுக்கு சிறு வயதில் கணக்கொன்றை ஆரம்பிக்க ஊக்கமளிப்பதாக அமையும். அமானா வங்கி, 2 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் அனைவருக்கும்இ அவர்களுக்காக ஆரம்பிக்கும் கணக்குகளுக்கு ரூ. 500ஐ வைப்பிலிட்டு வழங்குகின்றது” என்றார்.

சிறுவர்கள் மீதான அமானா வங்கியின் கரிசனை என்பது சேமிப்பு கணக்குகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை. வங்கியின் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளினூடாக, ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கமைய, சிறுவர்களின் சமூகத் தேவைகளை மேம்படுத்தி வழங்குவது என்பதற்கு பங்களிப்பு வழங்கப்படுகின்றது. அமானா வங்கியின் முன்னணி சமூகப் பொறுப்புணர்வு வாய்ந்த நடவடிக்கையாக OrphanCare திட்டம் அமைந்துள்ளதுடன், இந்த சமூக இலக்கை அடிப்படையாகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனூடாக சுமார் 2800 க்கும் அதிகமான அநாதரவான சிறுவர்களுக்குஇ சிறுவர் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் 2 ஆம் ஆக்கத்தின் பிரகாரம் எவ்வித பாகுபாடுகளுமின்றி அனுகூலமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் அனுமதி அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி.; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (ISDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97% பங்குளைக் உரிமம் கொண்டுள்ளது. ISDB குழுமம் என்பது ‘AAA’ தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கிக்கு எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் கிடையாது. அதன் பிரத்தியேகமான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான அனாதை பராமரிப்பு நம்பிக்கை நிதியை ‘OrphanCare’ Trust ஐ மாத்திரமே பேணி வருகின்றது.

%d bloggers like this: