Take a fresh look at your lifestyle.

வெளியேற்றப்பட்ட தாமரை ! அவருக்கு வாக்குகள் குறைய இது தான் காரணமா ?

2

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்பட்டுள்ளார் என பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் அது தாமரை என உறுதியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நாடக நடிகையாக இருந்து பிக்பாஸ் என்றாலே என்ன என தெரியாமல் நிகழ்ச்சிக்குள் வந்து தற்போது கிட்டத்தட்ட இறுதி வரை தாமரை வந்துள்ளார்.

நிரூப், அமீர் உள்ளிட்டோர் இறுதி சுற்றுக்கு சென்றுவிட்ட நிலையில் தற்போது தாமரையை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றம் செய்துள்ளமைது பலருக்கும் அதிர்ச்சியினை கொடுத்துள்ளது.

தாமரை வெளியேற்றம் உறுதியாதனை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தமது ஆதரவுகளையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமீர், நிரூப் தவிர தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நான்கு போட்டியாளர்களில் தாமரைக்கு தான் குறைவான வாக்குகள் என தெரியவந்துள்ளது. தாமரை கடந்த சில வாரங்களாகவே நிரூப்புக்கு ஆதரவாக இருந்து வந்தமையே அவருக்கு வாக்குகள் குறைவாக வர காரணமாக அமைந்துள்ளது.

நேற்று நடந்த போட்டியிலும் கூட நிரூப்பை இறுதி சுற்றுககு அனுப்ப வேண்டும் என்று தான் அவர் பேசி கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

%d bloggers like this: