Take a fresh look at your lifestyle.

‛விக்ரம்’ திரைப்படம் – இறுதிக்கட்டத்தில்!

4

உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‛விக்ரம்’.

அதிரடி ஆக் ஷன் படமாக தயாராகி வரும் ‛விக்ரம்’ திரைப்படம், கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாத இறுதியில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. அதன்பிறகு மற்ற பணிகளை தொடங்கி கோடையில் படத்தை வெளியிட எண்ணி உள்ளனர் படக்குழுவினர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில்  போலீஸ் வேடத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக சினிமா வட்டாரம் கூறுகின்றது. லோகேஷின் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இன்னும் கூடுதலாக, அதிரடியாகவே இருக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.

%d bloggers like this: