இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதற்கமைய களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 254 ஓட்டங்களை 9 விக்கெட் இழப்பிற்கு பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக பெத்தும் நிசங்க 55 ஓட்டங்களும், சரித் அசலன்க 52 ஓட்டங்களும் பெற்றுக்கொண்டனர்.
சிம்பாப்வே அணி சார்பாக பந்து வீச்சில் ரிச்சட் நங்கரவா இரு விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டார்.
இப்போட்டித் தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றுள்ளன.
இதற்கமைய, இன்றைய போட்டியில் வெற்றிப் பெறும் அணி தொடரை கைப்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.