Take a fresh look at your lifestyle.

தென்னாப்பிரிக்காவுக்கு 288 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

9

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்ல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ஷிகர் தவான் களமிறங்கினர்.

ஆரம்பத்தில் முதலே துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய குறித்த ஜோடி 63 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவான் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு 115 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 55 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் 71 பந்தில் 2 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 85 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ஓட்டங்களை எடுத்துள்ளது. ஷர்துல் தாக்கூர் 44 ஓட்டங்களும், அஷ்வின் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, 288 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.