Take a fresh look at your lifestyle.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு20 தொடரை கைப்பற்றிய அயர்லாந்து

6

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 தொடரில் விளையாடியது. 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி இருபதுக்கு20 போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது. நாணயசூழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பாட்டம் செய்த ஆப்கானிஸ்தான் 15 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ஓட்டங்கள் எடுத்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதிகபட்சமாக உஸ்மான் கனி 44 ஓட்டங்கள் எடுத்தார்.

மழை தொடர்ந்து பெய்ததால், ட்க்வொர்த் லூயிஸ் முறையில் 7 ஓவரில் 56 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என அயர்லாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 6.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 56 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இருபதுக்கு20 தொடரை 3-2 என கைப்பற்றி அசத்தியது.

ஆட்ட நாயகன் விருது மார்க் அடைருக்கும், தொடர் நாயகன் விருது டாக்ரெலுக்கும் வழங்கப்பட்டது.

%d bloggers like this: