Take a fresh look at your lifestyle.

வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா!

1

செர்பியாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார்.

புயெர்டோ ரிகோ நாட்டைச் சேர்ந்த செபாஸ்டியன் ரிவேராவை தோற்கடித்தார் புனியா. இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் பின் தங்கியிருந்த பூனியா பிறகு சிலபல பஞ்ச்களைக் கொடுத்து 11-9 என்று வெற்றி பெற்று வெண்கலம் வென்றார். ஒரு கட்டத்தில் பூனியா 0-6 என்று 6 புள்ளிகள் பின் தங்கியிருந்தார். அதன் பிறகு அசாத்திய எழுச்சி கண்டார்.

முதலில் ரெபெசாஜ் ரவுண்ட் மூலம்தான் போராடி வெண்கல பதக்கச் சுற்றுக்குள் நுழைந்தார் பஜ்ரங் புனியா. ரெபெசாஜ் சுற்றில் அமெரிக்க வீரர் வாஸ்ஜென் டெவன்யன் என்பவரை பரபரப்பான ஆட்டத்தில் 7-6 என்று வீழ்த்தி வெண்கலச்சுற்றுக்குள் நுழைந்தார்.

பர்மிங்ஹாம் காமன்வெல்த் தங்கப்பதக்க வீரரான புனியா, காலிறுதியில் மைக்கேல் டயாகோமிஹாலிஸ் இடம் 10-0 என்று இருதயம் நொறுங்கும் தோல்வியைக் கண்டாலும் 65 கிலோ உடல் எடைப்பிரிவில் மைக்கேல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதால் புனியா ரெபிசாஜ் ரவுண்டுக்கு தகுதி பெற்றார். புனியா வெண்கலம் வெல்ல, 53 கிலோ உடல் எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீரர் வினேஷ் போகட் வெண்கலம் வென்று அசத்தினார், இந்த தொடரில் இந்தியாவுக்கு மொத்தம் 2 வெண்கலம் கிடைத்துள்ளது.

%d bloggers like this: