Take a fresh look at your lifestyle.

150 ரன்கள் வெற்றி இலக்கு மும்பையை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா ஐதராபாத்

50

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் (56) ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசரஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்று என்ற வாழ்வா? சாவா? நிலையுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது.

அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இருப்பதுபோல் வார்னர் டாஸ் வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 4 ரன் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கினார். மறுமுனையில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்த நிலையில் சந்தீப் சர்மாவின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். டி காக் 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மும்பை இந்தியன்ஸ் 11.1 ஓவரில் 81 ரன்கள் எடுத்திருந்தபோது சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

%d bloggers like this: