Take a fresh look at your lifestyle.

ஆனவிலுந்தாவ சம்பவம் தொடர்பில் டோஸர் இயந்திரத்தின் சாரதி கைது

166

ஆனவிலுந்தாவ சரணாலயத்திற்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமான முறையில் காடழிப்பு செய்த சம்பவத்துடன் தொடர்புடைய டோஸர் இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளரினால் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முந்தலம், கீரியங்கல்லி பகுதியில் வைத்து குறித்த நபர் மகைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த நபரின் டோஸர் இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஆனவிலுந்தாவ சரணாலயத்தின் ஒரு பகுதியை இனந்தெரியாத சிலர் டோஸர் இயந்திரத்தின் மூலம் முழுமையாக அழித்திருந்தனர்.

%d bloggers like this: