Take a fresh look at your lifestyle.

ஸ்ரதன் தோட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு!

86

ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும் ஸ்ரதன் தோட்டத்தில் கடந்த சில தினங்களாக தோட்ட தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் அளவு குறைந்தமையினால் தோட்ட நிர்வாகம் ஒருநாள் சம்பளம் வழங்காமல் தொடர்ந்து அரைநாள் சம்பளம் வழங்கிவருவதனால் தொழிலாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறித்த தோட்டத்துக்கு விஜயம் செய்து அவர்களின் பிரச்சினைகளை நேரில் ஆராய்ந்ததோடு ஹட்டன் பெருந்தோட்டயாக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தினங்களுக்கு சம்பளம் வழங்குவதாகவும் மற்றும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதாகவும் ஹட்டன் பெருந்தோட்ட யாகத்தின் நிறைவேற்று அதிகாரி அமைச்சருக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடையம் தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பதாக அமைச்சர் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: