பயணிகள் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளை முன்வைக்க “BAD BUS”என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நேற்று (11) அமைச்சில் இடம்பெற்றது.
பயணிகளுக்கு மாத்திரம் அன்றி பஸ் உரிமையாளர்களும் இதனுடாக தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.