Take a fresh look at your lifestyle.

இன்றைய வானிலை தொடர்பான விபரங்கள்

3

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தாழமுக்கப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாக உள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வட மாகாணங்களில் இன்று  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

%d bloggers like this: