Take a fresh look at your lifestyle.

செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் தொடருந்து மோதி பலி!

3

வவுனியா – செட்டிக்குளம் – மெனிக்பாம் கல்லாறு பாலத்தில், செல்பி எனப்படும் தாமி படம் எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தொடருந்தில் மோதி உயிரிழந்தார்.

தலைமன்னாரிலிருந்து அனுராதபுரம் நோக்கி இன்று காலை பயணித்த தொடருந்து, மெனிக்பாம் கல்லாறு பாலத்தினை அண்மித்த சந்தர்ப்பத்தில், அந்தப் பாலத்தில் இரண்டு இளைஞர்கள் தாமி படம் எடுக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது, தொடருந்து வருவதை அவதானித்த ஓர் இளைஞர் ஆற்றில் குதித்ததுடன், மற்றைய இளைஞர் தொடருந்தில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முருங்கன் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் செட்டிக்குளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்

%d bloggers like this: