Take a fresh look at your lifestyle.

வார இறுதியில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நீர்வெட்டு

4

எதிர்வரும் வார இறுதியில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தின் 13 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணி தொடக்கம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் கீழே…

* கொழும்பு 04, 05, 06, 07 மற்றும் 08
* கோட்டை மற்றும் கடுவலை மாநகர சபை அதிகாரப்பிரிவு,
* மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபை அதிகாரப்பிரிவு,

அம்பத்தலையில் இருந்து கோட்டை நீர் தடாகத்திற்கு நீரை விநியோகிக்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

%d bloggers like this: