Take a fresh look at your lifestyle.

நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை வௌியீடு

4

நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று 01ஆம் திகதி  பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டது.

முதலில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அவர்களினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும அவர்களிடம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து டளஸ் அழகப்பெரும அவர்களினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

45 ரூபாய் மற்றும் 15 ரூபாய் பெறுமதியான முத்திரைகளே இவ்வாறு வெளியிடப்பட்டன.

சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவில் முத்திரை வடிவமைப்பு போட்டியில் வெற்றிபெற்ற கந்தானை புனித செபஸ்தியன் மகா வித்தியாலயத்தின் நிமேஷ் சமத் பெரேரா மாணவன் மற்றும் நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் ஷினாலி ருவண்யா பீரிஸ் மாணவி ஆகியோரின் சித்திரங்களை கொண்ட இம்முறை நத்தார் தின நினைவு முத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேடம்சமாகும்.

புனித செபஸ்தியன் மகா வித்தியாலயத்தின் நிமேஷ் சமத் பெரேரா மாணவனினால் வரையப்பட்ட பிரதமரின் உருவப்படம் இதன்போது அம்மாணவரினால் பிரதமருக்கு வழங்கப்பட்டது. கனிஷ்ட பிரிவில் வெற்றிபெற்ற நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் ஷினாலி ருவண்யா பீரிஸ் மாணவியும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தார்.

கங்காராம விகாராதிகாரி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் மற்றும் கலாநிதி செக்டஸ் குருகுலசூரிய மற்றும் மால்கம் ரஞ்சித் கர்தினால்  ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

%d bloggers like this: