Take a fresh look at your lifestyle.

சுமைத்தூக்கும் பணியாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை!

4

மாத்தளை – அம்பகஹமுல பிரதான பேருந்து நிலையத்தில் சுமைத் தூக்கும் பணியாளர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 37 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று 01ம் திகதி  இரவு ஏற்பட்ட இந்த மோதலின்போது, குறித்த நபர் ஆயுதமொன்றினால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மாத்தளை – சுதுகங்கவத்தை பகுதியைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாத்தளை – விகாரை வீதி பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெண்ணொருவர் தொடர்பில் குறித்த இருவருக்கும் இடையில் இவ்வாறு மோதம்ல் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.