Take a fresh look at your lifestyle.

தலவாக்கலையில் புதிய உப பிரதேச செயலகம் திறந்து வைப்பு

3

தலவாக்கலையில் புதிய உப பிரதேச செயலகம் இன்று  23ஆம் திகதி மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சேதன பசளை தயாரிப்பு நிலையத்தையும் ஆளுநர் திறந்து வைத்துள்ளார்.

தலவாக்கலை நகரம் மற்றும் திம்புளை பகுதியை மையப்படுத்தி புதிய உப பிரதேச செயலகம் அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னர் நுவரெலியா பிரதேச செயலலாளர் காரியாலயத்தோடு இணைந்தவாறு பிரதேச செயலகம் காணப்பட்டது.

இதேவேளை, தலவாக்கலை – லிந்துலை பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை பயன்படுத்தி சேதன பசளை தயாரிப்பு நிலையமும் மத்திய மாகாண ஆளுநரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன், தலவாக்கலை – லிந்துல பிரதேச சபைத் தலைவர் எல்.பாரதிதாசன், நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலபொட உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

%d bloggers like this: