Take a fresh look at your lifestyle.

உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்துநர்களுக்கு விஷேட அறிவித்தல்

8

2021 (2022) க.பொ.த உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுபவர்களுக்காக பரீட்சை திணைக்களத்தினால் அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, விடைத்தாள் திருத்த பணிகளில் ஈடுபடுவர்களுக்கு தெரிவு செய்வதற்காக இணையவழி முறையினூடாக விண்ணப்பம் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்காணப்படும் எந்தவொரு முறையினூடாகவும் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், குறித்த கட்டமைப்புகளுக்கு பிரவேசிப்பதற்காக விண்ணப்பதாரிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்த முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

* இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தள முகவரியான www.doenets.lk என்ற முகவரிக்கு பிரவேசதித்து “ எங்களின் சேவை” என்ற தெரிவில் விண்ணப்ப பத்திரம் (பாடசாலை பரீட்சை) என்பதை கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்ப பத்திரத்தை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.

* இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ தொலைபேசி செயலியினூடாக (Moblie Application) “DoE” என்ற தெரிவுக்கு சென்று ஒன்லைன் விண்ணப்பம் (பாடசாலை பரீட்சை) என்பதை கிளிக் செய்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

* அவ்வாறு இல்லாவிட்டால் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து விண்ணப்ப பத்திரத்தை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.

%d bloggers like this: