Take a fresh look at your lifestyle.

4 மணி நேர மின் தடை அபாயம்! விரைவில் அமுலுக்கு!

3

மார்ச் மாதம் ஆகும் போது  4 மணி நேர மின் தடை அபாயம் உள்ளது என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த மின் தடையால் ஏற்படும் இடையுறுகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார். ஹங்வெல்ல பிரதேசத்தில் நடைப்பெற்ற வைபவமொன்றில் இதைப்பற்றி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்சம் ஏப்ரல் மாதம் பருவமழை தொடங்கும் வரையில் தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பில் எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். மழைக்காலம் வரை நாட்டில் எரிபொருளை பயன்படுத்தியே மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும். 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான இந்த முயற்சியின் அடிப்படையில், பெரிய கடனைப் பெறாவிட்டால் மார்ச் மாதத்திற்குள் சுமார் 4 மணி நேர தினசரி மின்வெட்டை அமுல்படுத்த வேண்டும்.

4 மணி நேர மின்வெட்டுக்கு செல்வதை விட, இப்போதிருந்தே ஒன்றரை மணி நேர வெட்டுகளை அமல்படுத்துவது நல்லது அல்லவா? இரண்டு நாட்கள் நட்சத்திர ஹோட்டல்களில் அடைத்து வைத்துவிட்டு 28 நாட்கள் பட்டினி கிடக்க வேண்டுமா? அல்லது தினமும் மூன்று வேளையும் சாப்பிட காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி வீட்டிலேயே உணவை சமைக்க வேண்டுமா?  எது சிறந்தது?” என அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: