சமீபத்திய மின்வெட்டுக்கு, கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடைதான் முக்கியக் காரணம் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த திடீர் மின் தடை காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு ஊடக பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டிருந்த ஜானக ரத்நாயக்க, குறித்த திடீர் மின்தடை நாசகார வேலை என தற்போது தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அடுத்து குறித்த சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜானக ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, மின்வெட்டு இன்றி இன்றைய தினம் மின்சாரத்தை வழங்க முடியும் என ஜானக ரத்நாயக்க ஒரு ஊடக பேச்சுவார்த்தையில் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.