போதை மருந்து தொகையொன்றை விற்பனை செய்துக் கொண்டிருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்மீமன பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சந்தேகநபர் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் படி காலி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சம்பத் உயன பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 620 போதை மருந்துகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மாவட்ட சுகாதார பணிப்பாளர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுளள்தாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.