அதன்படி, எதிர்வரும் தினத்தில் குறித்த குழு நியமிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அததெரணவிற்கு தெரிவித்தார்.
கடந்த தினம் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் போது 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்து 20 ஆவது அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இதன்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக அமைச்சரவை இணை குழுவொன்றும் நியமிக்கப்பட்ட நிலையில், அதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.