Take a fresh look at your lifestyle.

வெளியாட்கள் உட்புகுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது

48

பெருந்தோட்ட பகுதிகளுக்குள் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி வெளியாட்கள் உட்புகுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ – கொட்டியாகலை தோட்டத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு இந்த தோட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதி இருப்பதாகக் கூறி அந்த தோட்டத்திற்கு இராணுவத்துடன் அத்துமீறி நுழைந்து தேயிலை செடிகளை அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளார்.

இதற்கு தோட்ட மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

எனவே தோட்டப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுமானால் மக்களோடு இணைந்து போராட வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்தச் சம்பவத்துக்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: