கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொல இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
33 வயதான 2 பிள்ளைகளில் தந்தை ஒருவருக்கே இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி கிரேண்ட்பாஸ், கொஸ்கம சந்தியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகமின்றி ஒப்புவிக்கப்பட்டதால் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.