Take a fresh look at your lifestyle.

தமிழர் தேசிய சபை என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் திட்டம்.

66

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை அடைந்துக் கொள்வதற்கு, சர்வதேச செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்கி தமிழர் தேசிய சபை என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜா தலைமையில் இதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமைப்பில், ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யாஸ்மின்சூக்கா போன்றவர்களையும் உள்ளடக்கவிருப்பதாக தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவை சேனாதிராஜாவை எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவியபோது, இந்தவிடயம் தொடர்பில் தற்போதைக்கும் எந்தவிளக்கத்தையும் வழங்க முடியாது என்று கூறினார்.

%d bloggers like this: