மாத்தறை – தங்காலை பிரதான வீதியின் கந்தர, கபுகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (25) காலை இடம்பெற்றுள்ளது.
மாத்தறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதே திசையில் பயணித்த பேரூந்து ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
32 வயதான தலல்ல பகுதியை சேர்ந்த இளைஞனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.