காலி – மாபலகம பிரதான வீதியின் லபுதுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
மாபலகமயில் இருந்து காலி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுக்கு பின்னால் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்சை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த லொறி ஒன்றில் மோதியமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் 26 வயதான தலகஹா பகுதியை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.