Take a fresh look at your lifestyle.

தமிழகத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம்

4

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று முன்தினத்தில் இருந்து இடைவிடாது மழை கொட்டியது. நேற்று முன்தினம் இரவிலும், நேற்று காலையிலும் மிக பலத்த மழை பெய்தது.
சென்னை நகரில் அதிகபட்சமாக சாந்தோம் பகுதியில் 23 செ.மீட்டர் மழை பெய்தது. இதேபோல பல இடங்களிலும் 20 செ.மீட்டருக்கு மேல் மழை கொட்டியது.

இதேபோல சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து கனமழை விட்டு விட்டு பெய்யும் நிலையே காணப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு நாளை மறுநாள் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11-ம் திகதி வட தமிழக கடற்கரையை நெருங்கும் இதன் காரணமாக வடகடலோர மாவட்டங்களுக்கு வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் ஒரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வரும் 10 ஆம் திகதி மட்டும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற எச்சரிக்கை என்பது நிர்வாகம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்படும் எச்சரிக்கையாகும்.

%d bloggers like this: