Take a fresh look at your lifestyle.

மதுரையில் ரூ.5 கோடி செலவில் நகர் ஊரமைப்பு கட்டிடம்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

13

மாநிலத்தில் நகர்ப் பகுதிகளில் திட்டமிட்டபடி சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக நகர் ஊரமைப்பு இயக்ககம் உருவாக்கப்பட்டது. முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சியை நகரப் பகுதிகளில் ஏற்படுத்திட மண்டலத் திட்டங்கள், முழுமைத் திட்டங்கள், புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து செயல்படுத்துவது, மனைப் பிரிவுகள், மனைகள், கட்டிடங்கள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் திட்டங்களில் மாற்றங்கள் செய்தல் போன்ற பணிகளை இவ்வியக்ககம் செய்து வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை ஆற்றி வரும் நகர் ஊரமைப்பு அலுவலக கட்டிடத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்டும் வகையில், மதுரை மாநகர், கூடல்புதூரில் தரை மற்றும் முதல் தளத்துடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்வலுவலகம், இணை மற்றும் உதவி இயக்குநர்கள் அலுவலக அறைகள், பணியாளர்கள் அறைகள், கூட்டரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, தலைமைச் செயலாளர் இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஷ்குமார்மக்வானா, நகர் ஊரமைப்புத்துறை இயக்குநர் சரவணவேல்ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

%d bloggers like this: