Take a fresh look at your lifestyle.

குளிக்கும் படத்தை தோழிக்கு அனுப்பிய பெண் – விளையாட்டு வினையில் முடிந்தது

3

கன்னியாகுமரியில் இளம் பெண்ணொருவர் தோழிக்கு அனுப்பிய குளியல் புகைப்படம் இறுதியில் பொலிஸ் முறைப்பாட்டில் முடிந்துள்ளது.

கருக்கல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் தனது தோழியுடன் மிகவும் நெருங்கிப்பழகி வந்துள்ளார். சிறு வயது முதலே பழக்கம் என்பதால் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இளம்பெண் ஒரு நாள் தான் குளிப்பதை விளையாட்டுத்தனமாக தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார்.

தொலைபேசியில் பிடித்த புகைப்படத்தினை தனது நெருங்கிய தோழிக்கு அனுப்பியுள்ளார். அவர் அதனை பார்த்துவிட்டு, தனது தோழியின் அந்தரங்கப்படம் எனத் தெரிந்தும் அதனை தனது ஆண் நண்பரான ஜாக்சன் என்பவருக்கு அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து புகைப்படம் எடுத்த குறித்த பெண்ணை ஜாக்சன் அந்த புகைப்படத்தை காட்டி தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் குறித்த பெண் ஜாக்சனிடம் கடுமையான நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த புகைப்படத்தை வேறு சிலருக்கு அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நாளுக்கு நாள் அந்தப்பெண்ணுக்கு தொல்லை அதிகரித்தமையால், குறித்த பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதனையடுத்து அந்தப்பெண் கருக்கல் பொலிஸ் நிலையத்தில் இதுதொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த இளம்பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில் தோழி, அவரது நண்பர் ஜாக்சன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

%d bloggers like this: