சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.
உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை இஸ்ரேலில் தீவிரமடைந்து வருகிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு உள்ளநாடுகளில் இஸ்ரேல் 24 வது இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 1.55 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மேலும், அங்கு 1,119 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 1.14 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதையடுத்து, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு 3 வார ஊரடங்கை இஸ்ரேல் அரசு அமல்படுத்த உள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் 3 வார காலத்துக்கு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.