Take a fresh look at your lifestyle.

ரஷ்யாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா பாதிப்பு

4

கொரோனா எனும் பெருந்தொற்று எந்த நாட்டினாலும் முழுமையாக ஒழியவில்லை. சில நாடுகள் மட்டுமே வைரஸ் பாதிப்பைச் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதைக் கட்டுப்படுத்துவது சவாலான ஒன்றாகவே உள்ளது. இதனால் பின்தங்கிய நாடுகள் தொடங்கி வளர்ந்த நாடுகள் கூட வைரஸை கட்டுப்படுத்த திக்குமுக்காடி வருகின்றன.

அப்படி தான் இப்போது ரஷ்யாவில் கொரோனா வைரஸ் ஆட்டம் காட்டி வருகிறது. ரஷ்யாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 40,251 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1,160 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல், ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு இதுவாகும். அதேபோல உயிரிழப்புகளும் கையை மீறி செல்லும் அளவுக்கு அதிகரித்து வருகிறது.
நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் மாஸ்கோ உட்பட ரஷ்யாவின் அனைத்து பகுதிகளிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பணிகளைத் தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: