Take a fresh look at your lifestyle.

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் – 29 பேர் பலி

2

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் மரிப் மாகாணத்தில் உள்ள மசூதி மற்றும் மதப்பள்ளியை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று இரண்டு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இந்த ஏவுகணை தாக்குதலில் மசூதி மற்றும் மதப்பள்ளியில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 29 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.

%d bloggers like this: