Take a fresh look at your lifestyle.

ஆப்கான் மந்திரிசபையில் மாற்றம் கொண்டுவர தலீபான்கள் முயற்சி…!

2

ஆப்கானிஸ்தானில் மந்திரிசபையில் மாற்றங்கள் செய்வதற்கு முயற்சிகள் நடப்பதாக அரசின் துணை செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி தெரிவித்துள்ளார். “ மந்திரிசபை இன்னும் நிறைவு பெறவில்லை. சமூகத்தின் பல்வேறு அம்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வல்லுனர்களையும், திறமைமிக்கவர்களையும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது” எனவும் அவர் கூறினார்.

மேலும் மந்திரிசபை இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது என்றும் சமூகத்தின் பல்வேறு அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வல்லுநர்கள் மற்றும் திறமையாளர்களைக் கொண்டு இந்த மந்திரிசபை அமைக்கப்படும் என்றும் பிலால் கரிமி தெரிவித்தார்.

%d bloggers like this: