Take a fresh look at your lifestyle.

நிலக்கரி பயன்பாட்டை கைவிட முடிவு – கிளாஸ்கோ மாநாட்டில் 40 நாடுகள் ஒப்புதல்…!

4

உலகளவில் வெப்பம் அதிகரித்து வருவதை குறைக்கும் நோக்கில், நிலக்கரி பயன்பாட்டை கைவிட, 40 நாடுகள் ஒப்புக் அளித்துள்ளன.

ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு நடக்கிறது.

இதில் புவி வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவிற்கு கட்டுக்குள் வைப்பதற்கான திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒன்றாக அதிக அளவில் வெப்பத்தை வெளியேற்றும் நிலக்கரி பயன்பாட்டை தவிர்க்கும் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கு தென் கொரியா, இந்தோனேஷியா, போலந்து, வியட்னாம், சிலி உள்ளிட்ட 40 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

ஆனால் நிலக்கரியை பெரிதும் சார்ந்துள்ள இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்து விட்டன.

இந்த தீர்மானத்தை ஆதரித்த 40 நாடுகளில், முன்னேறிய நாடுகள், 2030க்குள் நிலக்கரி பயன்பாட்டை நிறுத்தும் எனவும் சிறிய நாடுகள், 2040ல் நிலக்கரியை கைவிடும் என்றும் இந்த நாடுகள் இனி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நிலக்கரி சார்ந்த புதிய திட்டங்களுக்கு முதலீடு செய்யப் போவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளன.

அதுபோல இந்த நாடுகளைச் சேர்ந்த ஏராளமான நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவையும் நிலக்கரி தொழிலுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெறுவதாக உறுதி அளித்துள்ளன.

%d bloggers like this: