Take a fresh look at your lifestyle.

ஈராக் விமானப்படை தாக்குதல் – ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் பலி

6

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் ரஷியா, அமெரிக்கா மற்றும் உள்நாட்டு அரசுப்படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் வீழ்ந்தனர்.

ஆனாலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சில குழுக்கள் ஈராக்கின் பாலைவனப்பகுதிகளில் மறைந்திருந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இவர்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஈராக் போலீசாரும், ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசுப்படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் டியாலா மாகாணம் உத்ஹீம் பகுதியில் விமானப்படையினர் நேற்று அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தினர். ஹெலிகாப்டர் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும், தரைவழியாகவும் டியாலா மாகாணத்தில் ஈராக் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

%d bloggers like this: