இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி, பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இந்தியாவின் வழக்கை ஏற்று, மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால், மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் ஐகோர்ட்டில் குல்பூஷண் ஜாதவ் இன்னும் மேல்முறையீடு செய்யவில்லை. மேல்முறையீடு செய்ய அவருக்கு அனுமதி அளிக்கும் பாகிஸ்தானின் அவசர சட்டம், நாளையுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது.
இதையடுத்து, அந்த அவசர சட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் நீட்டித்துள்ளது.