Take a fresh look at your lifestyle.

ஒமிக்ரான் பாதிப்பு வெளிநாடு பயணிகள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தது ஜப்பான்

1

கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்த வடிவங்களை கொண்டு பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது பரவ தொடங்கியுள்ளது. ஜெர்மனியிலும் முதன்முறையாக இதன் பாதிப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவருக்கு இதன் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இங்கிலாந்து நாட்டிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி விட்டன. இதே போல் ஜப்பான் நாட்டிலும் ஒமிக்ரான் வைரஸ் வராமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஜப்பான் நாட்டுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இன்று (நவ.29) முதல் நடைமுறைக்கு வரும் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜப்பானில் வணிகர்கள், வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக இந்த மாதத் தொடக்கத்தில் திறந்துவிடப்பட்ட எல்லைப் போக்குவரத்து மீண்டும் மூடப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தென்ஆப்பிரிக்கா உள்பட 8 நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் முதல் ஜப்பானுக்குள் நுழைய வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.