Take a fresh look at your lifestyle.

“ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும்” – லண்டன் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்

4

அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட உலகின் பல்வேறு வல்லரசு நாடுகளிலும் அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் என பல துறைகளில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சில பகுதிகளில் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அங்குள்ள அரசியல் சூழல்களை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். அந்தந்த நாடுகளின் வாழ்க்கை சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டாலும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளை உலகெங்கிலும் தமிழர்கள் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்தின் அரசியல் கட்டமைப்பிற்கு தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில், ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என லண்டன் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து லண்டன் சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.

இது தொடர்பான தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர் நிகோலஸ் ரோஜர்ஸ், முன்மொழிந்தார். சட்டமன்றத்தின் விவாத நேரத்தின் போது பேசிய அவர், இங்கிலாந்தின் சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பிற்கு தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். தமிழ்ச் சமூகம் லண்டன் நகரத்திற்கு ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பிற்கான நன்றியை பேரவை தெரிவிக்கிறது என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் பொங்கல் மற்றும் அறுவடை திருவிழா ஜனவரி 14 ஆம் திகதி தொடங்குகிறது. இதனால் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் எனவும், லண்டன் பெருநகர மேயர் இதனை உறுதி செய்து மிகவும் மதிப்புமிக்க தமிழ் சமூகத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

%d bloggers like this: