Take a fresh look at your lifestyle.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயங்கர வெடி விபத்து; 12 பேர் பலி

2

பாகிஸ்தானின் மிகப்பெரும் நகரங்களில் ஒன்றான கராச்சியில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் பலியாகினர். 12 பேர் காயம் அடைந்தனர். கராச்சியின் ஷெர்ஷா பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தின் அடியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தால் அந்த வங்கி கட்டிடமே குலுங்கியது. கட்டிடங்களில் கண்ணாடிகள் உடைந்தன, வாகனம் சேதமடைந்தது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கழிவு நீர் அமைப்பில் இருந்து வெடி விபத்து நிகழ்ந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், கேஸ் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது மீத்தேன் வாயுவால் வெடி விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகே தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதனால், அங்கு இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

%d bloggers like this: