Take a fresh look at your lifestyle.

பைடனை சமீபத்தில் தொடர்பு கொண்ட வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா பாதிப்பு

8

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், தெற்கு கரோலினாவின் ஆரஞ்சு பகுதியில் இருந்து பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகருக்கு விமானத்தில் செல்லும்போது, பைடனின் அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழியர் ஒருவர் பைடனுடன் 30 நிமிடங்கள் செலவிட்டு உள்ளார்.

அந்த ஊழியருக்கு திங்கட்கிழமை நடந்த கொரோனா பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பைடனுக்கு நடந்த பரிசோதனையில் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. எனினும், பைடனுக்கு நாளை (புதன்கிழமை) மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

அந்த ஊழியர் முழு அளவில் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தியுள்ளார். பைடனுடன் பயணம் செய்வதற்கு முன் ஊழியருக்கு நடந்த பரிசோதனையில் பாதிப்பு இல்லை என முடிவு வந்திருந்தது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.