ஆபிரிக்க நாடான கானாவின் அபியேட் பகுதியில் ஏற்பட்ட பெரிய வெடி விபத்தில் ஏராளமான கட்டடங்கள் தகர்ந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்ததோடு, 60 பேர் படுகாயம் அடைந்தனர். தங்கச் சுரங்கத்தில் வெடிப்பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லொறி ஒன்று இருசக்கர வாகனத்துடன் மோதியது.
இதன் போது லொறியில் இருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறியதன் காரணமாக அருகிலிருந்த கானாவின் உறுதியில்லாத நூற்றுக்கணக்கான வீடுகள் தகர்ந்து விழுந்தன.
இந்நிலையில் பாரிய கட்டிடங்கள், சுவர்கள் இடிந்துவிழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.