Take a fresh look at your lifestyle.

இரு சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டில் யுவதி கைது!

10

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 25 வயது யுவ­தி­யொ­ருவர், இரு சிறு­வர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

மெகய்லா யப்­லோன்ஸ்கி எனும் இந்த யுவதி, அரி­ஸோனா மாநி­லத்தைச் சேர்ந்­தவர். உள்­ளூரில் குதிரைப் பயிற்­று­விப்­பா­ள­ராக பிர­ப­ல­மா­னவர் இவர்.

இவர்கள் 17 வய­தான இரு சிறார்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­யுள்ளார் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இப்­பெண்ணை கைது செய்த பொலிஸார், அவரை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தினர்.

பாதிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் ஒரு சிறு­வனின் தாயார் வாக்­கு­மூலம் அளிக்­கையில், தானும் மெகய்­லாவும் சிறந்த நண்­பி­க­ளாக விளங்­கி­ய­தாக தெரி­வித்­துள்ளார்.

தனது மக­னுக்கும் மெகய்­லா­வுக்கும் இடை­யி­லான உறவு குறித்து தான் கேள்வி  எழுப்­பிய போதிலும், அது நட்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என மெகய்லா பதி­ல­ளித்தார் எனவும் அச்­சி­று­வனின் தாய் நீதி­மன்றில் தெரி­வித்தார்.

6 குதி­ரை­களை மெகய்லா யப்­லோன்ஸ்கி பரா­ம­ரித்து வரு­வ­தா­கவும் அவரை பிணையில் விடு­விக்­கா­விட்டால், அக்­கு­தி­ரை­களை கவ­னிப்­ப­தற்கு எவரும் இல்லை எனவும் மெகெய்­லாவின் சட்­டத்­த­ரணி கூறினார்.

மெகய்­லாவை  25,000 டொலர் பிணையில் செல்­வ­தற்கு நீதி­மன்றம் அனுமதியளித்தது. ஜூலை 29 ஆம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

%d bloggers like this: